அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கரூரில் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கேரளாவைச் சேர்ந்த 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆவணங்கள், ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இவரது வீட்டில் கடந்த ஆண்டிலும் சோதனை நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு நெருக்கமான இவர் வீட்டில் கடந்த 2023-ல் வருமான வரித்துறை சோதனையும் நடந்தது.
Tags :