தேமுதிக பொதுச்செயலாளருக்கு எடப்பாடி வாழ்த்து

by Staff / 15-12-2023 02:49:33pm
தேமுதிக பொதுச்செயலாளருக்கு எடப்பாடி வாழ்த்து

தேமுதிக பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பிரேமலதா விஜயகாந்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்ட அவர்; "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்றிருக்கும் அன்பு சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தங்களின் கட்சிப்பணி சிறக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

 

Tags :

Share via