பிரேமலதா விஜயகாந்துக்கு, அண்ணாமலை வாழ்த்து

by Staff / 15-12-2023 02:50:35pm
பிரேமலதா விஜயகாந்துக்கு, அண்ணாமலை வாழ்த்து

தேமுதிக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிரேமலாதவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்ட அவர்; தேமுதிக பொதுச் செயலாளராக, சகோதரி பிரேமலதா விஜயகாந்த் பொறுப்பேற்றுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பக்கபலமாக, இத்தனை ஆண்டுகள் மக்கள் பணிகளை மேற்கொண்டு வந்த சகோதரி, தமது புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தேமுதிகவை பல படிகள் முன்கொண்டு செல்ல, பாஜக சார்பாக வாழ்த்துகள். இவ்வாறு கூறியிருந்தார்.

 

Tags :

Share via

More stories