அனில் அம்பானி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் இரண்டாவது சுற்று விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

by Admin / 26-02-2026 01:29:56am
அனில் அம்பானி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் இரண்டாவது சுற்று விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் வங்கிகளில் பெற்ற கடன்களை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படும் விசாரணை தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு சொந்தமான மும்பை பாலி ஹில்லில் உள்ள உறைவிடம் என்ற சொகுசு இல்லத்தை அமலாக்க துறையினர் முடக்கியுள்ளனர். முடக்கப்பட்ட 17 அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பு 3716.83 கோடி ஆகும். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சொத்து தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்த சொத்தில் ஒரு பகுதி முடக்கப்பட்டு இருந்தது. இந்த புதிய நடவடிக்கையுடன் அனில் அம்பானி குடும்பத்திடம் இருந்து இதுவரை முடக்கப்பட்ட ஒட்டுமொத்த சொத்துக்களின் மதிப்பு 15,700 கோடிக்கு மேல் அதிகரித்து உள்ளது .இந்த சொத்து முடக்கத்தை தொடர்ந்து அனில் அம்பானி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் இரண்டாவது சுற்று விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo