இன்று நாடு முழுவதும் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள்.

by Admin / 12-02-2026 04:06:50am
இன்று நாடு முழுவதும் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள்.

இன்று நாடு முழுவதும் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று மத்திய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறுதல் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தடுத்தல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளித்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது .10க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சம்யுத்த கிசான் மூச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகள் இதற்கு ஆதரவு அளித்துள்ளன. வங்கி சேவைகள் மின்சாரம் போக்குவரத்து காப்பீடு மற்றும் அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் சில இடங்களில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது தமிழகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இந்த வேலை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. இந்தியாவின் 600 மாவட்டங்களில் இந்த போராட்டம் எதிரொலிக்கும் என்று தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

 

Tags :

Share via