தமிழக அரசியல் களம் சூடு பெறத் தொடங்கியுள்ளது
தமிழக அரசியல் களம் சூடு பெறத் தொடங்கியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விடுதலை சிறுத்தை கட்சியும் தனித்தனியான தங்கள் கட்சியினரோடு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். தமிழக வெற்றி கழகத்திற்கு தேவைப்படுகிற ஆறு இடங்கள் எந்த கட்சி வழியாக வழங்கப்பட்டு விஜய் ஆட்சி அதிகாரத்தை பெறப்போகிறார்கள் என்பது இன்று தெரிந்துவிடும். அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் எ. வ. வேலு, கனிமொழி, அ . ராசா, உதயநிதி ஸ்டாலின், திராவிட கழக தலைவர் ஆசிரியர் கி .வீரமணி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக தன் கட்சியின் மூத்த தலைவர்களோடு ஆலோசித்து வருகிறார். முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் சந்தித்து வந்த காட்சியை பார்த்து வருகிறோம். இப்போது உள்ள சூழலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பொதுச் செயலாளர் என். ஆனந்துடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
Tags :



















