ஓடும் ரெயிலில் பெண் கூட்டு பலாத்காரம்: 4 பேர் கைது

by Editor / 09-10-2021 03:54:44pm
ஓடும் ரெயிலில் பெண் கூட்டு பலாத்காரம்: 4 பேர் கைது


மும்பை நோக்கி சென்ற ரெயிலில் ஏறிய கொள்ளையர்கள் 8 பேர், பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.


உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து,  மும்பை நோக்கி புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. மும்பைக்கு 120 கி.மீ., தொலைவில் உள்ள லகத்புரி நகரில் ஏ.சி., பெட்டியில் ஆயுதங்களுடன் 8 கொள்ளையர்கள் ஏறினர், பயணிகளுடன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளைடித்தனர். மேலும் பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்தனர். தடுக்க முயன்றவர்களை ஆயுதங்களால் தாக்கினர். அதில் சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.


அந்த ரெயில் கசாரா ரெயில் நிலையம் வந்த போது, பயணிகள் அலறினர். இதனையடுத்து அங்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர், 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories