EVM கொண்டு சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து

மத்தியப் பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. இந்த நிலையில், இரவு வாக்குபத்திவு இயந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பேதுல் மக்களவை தொகுதிக்குட்பட்ட கவுலாவில் இருந்து 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, பேருந்தில் இருந்த தேர்தல் அதிகாரிகள் உயிர் தப்பிய நிலையில், 4 இயந்திரங்கள் சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :