மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கொட்டி வருகிறார்கள்.

கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட [கன்னியாகுமரி, செங்கோட்டை] பகுதிகளில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கொட்டி வருகிறார்கள்..
கேரளா அரசோடு உறவாடிக் கொண்டிருக்கும் தி.மு.க அரசு இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் குப்பைகளை தானே லாரியில் எடுத்து கேரளாவில் கொட்டி விடுவேன் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி எச்சரித்துள்ளார் .
.தொடர்ந்து கேரளாவை சார்ந்த லாரிகளில் இரவோடு இரவாக வந்து மருத்துவ கழிவுகளை கொட்டுவதின் மூலமாக நோய் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அந்த கழிவுகளை மாடுகள் உண்பதன் மூலமாக மாட்டின் வழியாக நோய்கள் உருவாவதற்கான சூழல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :