தாய், மகனின் கழுத்தை அறுத்து கொலை.. வேலைக்காரர் கைது

டெல்லியில் உள்ள லஜ்பத் நகரில் வீட்டு வேலைக்காரர் ஒருவர், தாய் மற்றும் மகனின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். கடந்த 1ஆம் தேதி முதல் வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததைக் கண்ட அருகில் இருந்தவர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தாயும், மகனும் சடலமாக கிடந்துள்ளனர். கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நிலையில் வேலைக்காரனை போலீசார் கைது செய்தனர்.
Tags :