மூணாறுக்கு சுற்றுலா சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உயிரிழப்பு.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காட்டன் மில் அருகே சுற்றுலா சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உயிரிழப்பு.சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சம்சுதீன்(25), கொளத்தூர் ரிஷி, ஆவடி மோகன் ஆகியோர் உயிரிழந்தனர். அப்துல் அஜீஸ், தீபக் ஆகியோர் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி. சென்னையில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா சென்ற போது விக்கிரவாண்டி அருகே விபத்து நடந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags : மூணாறுக்கு சுற்றுலா சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உயிரிழப்பு.



















