பத்திரப் பதிவுத்துறையில் 10 சதவீதம் லஞ்சம்- இபிஎஸ் குற்றம்சாட்டு அமைச்சர் மூர்த்தி மறுப்பு.

by Staff / 07-09-2025 11:07:55am
 பத்திரப் பதிவுத்துறையில் 10 சதவீதம் லஞ்சம்- இபிஎஸ் குற்றம்சாட்டு  அமைச்சர் மூர்த்தி மறுப்பு.

தமிழ்நாட்டில் பத்திரப் பதிவுத்துறையில் 10 சதவீதம் லஞ்சம் பெறுவதாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு, பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் உள்ள எந்த பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று கள ஆய்வு செய்து பாருங்கள். ஒரு நாளைக்கு 27 கோடி ரூபாய் லஞ்சம் பெறுகிறார்கள் என கூறுகிறாரா இபிஎஸ்?. கணக்கு வழக்கு இல்லாமல் எதையாவது பேசி கொண்டிருக்கிறார்” என்றார்.

 

Tags : பத்திரப் பதிவுத்துறையில் 10 சதவீதம் லஞ்சம்- இபிஎஸ் குற்றம்சாட்டு அமைச்சர் மூர்த்தி மறுப்பு.

Share via