தொழில்நுட்ப கோளாறு மதுரை- துபாய் ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து.

மதுரையில் இருந்து நேற்று துபாய் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் அங்கிருந்து காலை புறப்பட்டு 11 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும். இந்த நிலையில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக துபாயில் இருந்து இன்று மதுரைக்கு வரவேண்டிய விமானம் வராததால் இன்று பகல் 12:30 மணிக்கு துபாய் புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் பயணம் ரத்து செய்யப்படுவதாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன அலுவலகம் தகவல். மேலும் பயணிகளுக்கு விமானம் ரத்து தொடர்பாக செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று துபாய்க்கு செல்ல இருந்த பயணிகள் விமானம் ரத்தானதால் நாளை பயணம் திட்டமிட்டுள்ளதாக தகவல் மேலும் மதுரை டூ துபாய் க்கு ஸ்பைஸ்ஜெட் ஒரு விமானம் மட்டும் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
Tags : தொழில்நுட்ப கோளாறு மதுரை- துபாய் ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து.