வைகோ சகோதரி மறைவு.. முதலமைச்சர் நேரில் அஞ்சலி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சகோதரி சரோஜா இன்று காலமான நிலையில், அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி வைகோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார். அப்போது, அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் எம்.கே.மோகன், பூமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags :