கேரளாவுக்கு காரில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது.

by Editor / 06-02-2023 06:57:34am
கேரளாவுக்கு காரில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது.

தமிழகத்திலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும்  கேரளா மாநிலத்திற்கு அதிகளவில் கஞ்சா கடத்தபட்டுவருவதாக கூறப்ப்டும் நிலையில் அம்மாநில போலீசார் அதிகளவில் தகவலின் அடிப்படையில் வாகன சோதனைகளை நடத்தி கஞ்சா கடத்தலை கட்டுபப்டுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டுவருகின்றனர்.இந்த நிலையில்  கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு  கஞ்சா கடத்தி வருவதாக   கொல்லம் எஸ்.பி. க்கு நேற்று இரவு கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து அவரது தலைமையில் கோட்டைவாசல் பகுதியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை  நடந்த வாகன சோதனையில்  கொல்லத்தை சேர்ந்த  சுனில். நவ்ஷாத். ஆகியோர் வந்த காரில் நடந்தப்பட்ட  சோதனையில் காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 26 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு  கஞ்சாவோடு காரை பறிமுதல் செய்த போலீசார் சுனில். நவ்ஷாத். ஆகிய 2 போரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.இரு மாநில எல்லையில் அதிகாலையில் நடந்த இந்த சோதனை தொடரும் என்று கொல்லம் புறநகர் காவல்துறை கண்காணிப்பாளர் எம்.எல்.சுனில் தெரிவித்துள்ளார்.

கேரளாவுக்கு காரில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது.
 

Tags :

Share via

More stories