வெண்டைக்காய் சூப் செய்முறை

வெண்டைக்காய் சூப்
தேவை
வெண்டைக்காய் – 1/4 கிலோ
தக்காளி – 1
பெரிய வெங்காயம் – 1
மிளகு – 6
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
இலவங்கபட்டை இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – 1 கொத்து
துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு – 50 கிராம்
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி இலவங்கப்பட்டை, இலை, மிளகு, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் 3 அங்குலமாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து மிகவும் நன்றாக வதக்கவும் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். மஞ்சள்தூள், தக்காளி, உப்பு சேர்த்து கலவையை நன்றாக கொதிக்க விடவும். வெண்டைக்காய் வெந்ததும் வேக வைத்து மசித்த பருப்பு கலவையுடன் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
குறிப்பு வெண்டைக்காய் வதக்கும் போது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால் சீக்கிரம் வதங்கி விடும் நூல் நூலாக வராது.
Tags :