"அஜித்குமார் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது"

by Editor / 01-07-2025 03:52:30pm

அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளார். மேலும், "அஜித்குமார் உடலில் ஒரு பாகத்தையும் விடாமல் தாக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் 44 காயங்கள் உள்ளன. பதவி ஆணவத்தில் காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அஜித்குமார் இறக்கும் வரை, அவர் எதற்காக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு FIR பதிவு செய்யப்படவில்லை" என்று நீதிபதிகள் S.M.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளனது.

 

Tags :

Share via