கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைக்குமா..? உலக சுகாதார அமைப்பு காலதாமதம்..
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு விரைவில் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்கும் என மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் பயோடெக் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்காமல் உள்ளது. தடுப்பூசி குறித்த அனைத்து தரவுகளும் உலக சுகாதார அமைப்பிடம் சமர்பிக்கப்பட்டுவிட்ட போதிலும் அங்கீகாரம் வழங்குவதில் கால தாமதம் நீடித்து வருகிறது.
இது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த, மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா, தடுப்பூசிக்கி அங்கீகாரம் பெறுவது என்பது நிர்வாக அல்லது அரசியல் செயல்முறை அல்ல என்றும், அது ஒரு தொழில்நுட்ப செயல்முறை என கூறினார்.
மேலும் கோவாக்சின் தடுப்பூசிக்கு விரைவில் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்கும் என தான் உறுதியாக நம்புவதாகவும் கூறினார்.
Tags :