திருநெல்வேலி - பெங்களூரு எலகங்கா சிறப்பு ரயில்

by Editor / 23-05-2024 12:18:04am
திருநெல்வேலி - பெங்களூரு எலகங்கா சிறப்பு ரயில்

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க திருநெல்வேலி - பெங்களூர் எலகங்கா இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருநெல்வேலி - எலகங்கா சிறப்பு ரயில் (06045) திருநெல்வேலியில் இருந்து மே 22, 29, ஜூன் 5, 12 ஆகிய புதன்கிழமைகளில் மாலை 03.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.15 மணிக்கு எலகங்கா சென்று சேரும். மறு மார்க்கத்தில் எலகங்கா - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06046) எலகங்காவில் இருந்து இருந்து மே 23, 30, ஜூன் 6, 13 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 05.00 மணிக்கு புறப்பட்டு மாலை 06.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த எலகங்கா - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் ஆக இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்கள்  கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், பங்காரப்பேட், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையம் பெங்களூர்வில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

 

Tags : திருநெல்வேலி - பெங்களூரு எலகங்கா சிறப்பு ரயில்.

Share via