4 மாவட்டத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தும் தென்காசி போலீசார் .

by Editor / 25-01-2025 09:33:08pm
4 மாவட்டத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தும் தென்காசி போலீசார் .

சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட ஒரு நபர் தமிழகத்தில் உள்ள தென்காசி, தேனி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

 அதனை தொடர்ந்து, அந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்தபோது, அந்த செல்போன் எண்ணானது விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரில் இருப்பது தெரிய வரவே, விருதுநகர் மாவட்ட போலீசாரை வைத்து உடனடியாக விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

 அதனை தொடர்ந்து, அந்த முகவரிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த நபர் இல்லை என்பது தெரிய வரவே, அந்த செல்போன் எண்ணில் லொகேஷனை ஆய்வு செய்துள்ளனர்.

 அப்பொழுது, அந்த செல்போன் எண்ணின் லொகேஷன் அதே பகுதியை காட்டியுள்ள நிலையில், அது தொடர்பாக போலீசார் அந்தப் பகுதியில் ஆய்வு செய்தபோது, சையது அமீர் (வயது 27) என்ற நபர் தான் காவல் கட்டுப்பட்டறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

 அதனை தொடர்ந்து, அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த நபர் திருச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வரவே, தற்போது அந்த நபரை தென்காசி போலீசார் தென்காசி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து செய்யது அமீர் விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பகுதிக்கு எதற்கு வந்தார்?, வேறொரு நபர் முகவரியை வைத்து இந்த செல்போன் எண்ணை வாங்கியது எப்படி? நான்கு மாவட்ட பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஏன்? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில், நாளை நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தென்காசியில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : 4 மாவட்டத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தும் தென்காசி போலீசார் .

Share via