வங்கிகள் மூடப்பட்டால் 90 நாளில்  டெபாசிட் தாரர்களுக்கு காப்பீட்டுத் தொகை  நிதி அமைச்சர்

by Editor / 29-07-2021 08:26:57pm
வங்கிகள் மூடப்பட்டால் 90 நாளில்  டெபாசிட் தாரர்களுக்கு காப்பீட்டுத் தொகை  நிதி அமைச்சர்


வங்கிகள்  இயங்க தடை விதிக்கப்பட்டாலோ 90 நாட்களுக்குள் டெபாசிட் தாரர்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க வகை செய்யும் விதத்தில் டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் கியாரண்டி கார்ப்பரேஷன் சட்டத்தை திருத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது


.நேற்று  நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


சமீபத்தில் மூன்று அல்லது நான்கு வங்கிகள் இயங்க தடை விதிக்கப்பட்டது அவற்றில் சில வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் ஆகும் இந்த வங்கிகளில் டெபாசிட் வைத்திருந்தவர்கள் தங்கள் தொகையை எடுக்க முடியாமல் சிரமப்பட்டார்கள். இந்த நிலையை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை  முடிவு செய்தது.


ஏற்கனவே வங்கிகள் எல்லாம் அவற்றின் டெபாசிட் தொகையை ரிசர்வ் வங்கியினால் நடத்தப்படும் நிறுவனத்திடம் இன்ஷ்யூர் செய்யவேண்டும் என்று விதி உள்ளது இதன்படி டெப்பாசிட் தொகையில் 1 லட்சம் ரூபாய் வரை இந்திய ரிசர்வ் வங்கியின் கிளை நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காப்பீடு செய்யப்படுகிறது.


இவ்வாறு காப்பீடு செய்யப்படும் தொகையை 5 இலட்சமாக உயர்த்துவது என்று ஏற்கனவே அரசு முடிவு செய்ய முடிவு செய்துள்ளது. இவ்வாறு காப்பீடு செய்யப்படும் தொகையில் டெபாசிட் தொகை மற்றும் அதற்கான வட்டியும் அடங்கும் வங்கிகளில் உள்ளிட்ட பகுதிகளில் 98.3 சதவீதம் 1 லட்சம் முதல் 5 இலட்சத்துக்கும் உள்ளது டெபாசிட் தொகையில் 5 லட்சமாக காப்பீட்டு அளவை உயர்த்தும் பொழுது டெப்பாசிட் தொகையில் 50.9% காப்பீடாக கிடைத்துவிடும்.இவ்வாறு கிடைக்கும் காப்பீட்டுத் தொகை 90 நாட்களுக்குள் டெபாசிட் தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று இப்பொழுது சட்டத்தை திருத்துவது என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

Tags :

Share via