11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

by Staff / 05-03-2025 02:51:17pm
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில் தேர்வு நடைபெறும் அறைகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். திருச்சி இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் வருகைப்பதிவு குறித்து ஆசிரியர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். மேலும், திருவெறும்பூர் தொகுதியில் அமைந்துள்ள செயிண்ட் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் தேர்வு மையத்திலும் ஆய்வு செய்து, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

Tags :

Share via