காவல்துறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது"சென்னை உயர் நீதிமன்றம்.

by Editor / 22-01-2025 09:07:43pm
காவல்துறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த தொழிலதிபர் ஜூனைத் அகமது தனது ஊழியரான சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பணம் கொடுத்து தனது நிறுவனத்திற்கு சி.டி.ஸ்கேன் வாங்க அனுப்பி உள்ளார்.

அதன்படி, கடந்த 16ம் தேதி இரவு முகமது கவுஸ் திருவல்லிக்கேணியில் உள்ள ஹரீஷ் என்பவரிடம் ரூ.10 லட்சம் கொடுக்க வந்த போது, சீருடையில் இருந்த திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங் வழிமறித்து, இது ஹவாலா பணமா என கூறி வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பரதீப், பிரபு ஆகியோர் உதவியுடன் காரில் கடத்தி மிரட்டி ரூ.20 லட்சத்தை பறித்து சென்றனர்.

தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் பறித்த வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலர் தாமோதரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த வழக்கில் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டிருப்பதால், விசாரணை நடத்த வேண்டி உள்ளது என்றும் ஜாமீன் வழங்க கூடாது என்றும் தெரிவித்ததால் வேலியே பயிரை மேய்வது போல்,  காவல்துறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது  ஜாமின் மனு மீதான விசாரணை ஜனவரி 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

 

Tags : காவல்துறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது"சென்னை உயர் நீதிமன்றம்.

Share via