நாதக முக்கிய நிர்வாகி திமுகவில் இணையவுள்ளதாக தகவல்

by Staff / 22-02-2025 11:58:35am
நாதக முக்கிய நிர்வாகி திமுகவில் இணையவுள்ளதாக தகவல்

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்த மாதம் தூத்துக்குடி மணப்பாட்டில் நடைபெறும் ‘உறவுகள் சங்கமம்’ எனும் நிகழ்வில் சமூக செயற்பாட்டாளராகவே காளியம்மாள் பங்கேற்கிறார். அங்கு திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும் நிகழ்வில், அவர்களுடன் காளியம்மாளும் மேடையை பகிரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாதகவில் இருந்து விலகும் முடிவு குறித்து விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via