ரஷ்யாவின் பொருளாதாரத்தை எந்த விதத்திலும் அடிபணிய செய்துவிட முடியாது- ரஷ்ய அதிபர் புடின்

by Admin / 24-10-2025 11:26:18am
ரஷ்யாவின் பொருளாதாரத்தை எந்த விதத்திலும் அடிபணிய செய்துவிட முடியாது- ரஷ்ய அதிபர் புடின்

ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகளுக்கு பதில் அளிக்கும் விதமாக ரஷ்ய அதிபர் புடின் இந்த செயலுக்கு நட்பற்ற செயல் என்று அழைத்துள்ளார். இதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரத்தை எந்த விதத்திலும் அடிபணிய செய்துவிட முடியாது என்றும் ரஷ்யா ஒருபோதும் வெளிநாட்டில் இருந்து வரும் அழுத்தத்திற்கு அடிபணியாது என்றும் ரஷ்யாவிற்குள் ஏற்படும் எந்த ஒரு தாக்குதலுக்கும் மாஸ்கோ அளிக்கும் பதில் மிகப் பெரியதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.. ரஷ்யாவை  ஆக்கிரமிப்பாளராக குறைத்து மதிப்பிட்ட போதிலும் மேற்கத்திய நாடுகள் சிவப்புக் கோடுகளை மீறினால் ராணுவ விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று பலமுறை எச்சரித்து உள்ளார்.. அத்துடன் அமெரிக்கா- உக்ரைனுக்கு நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை வழங்கினால் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு மாற்றி அமைக்கப்படும் என்றும் நடவடிக்கைகள் வர நீண்ட காலம் இருக்காது என்றும்  புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via