பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

by Admin / 14-02-2026 01:29:25pm
பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

இன்று காரைக்கால் சந்தை திடலில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காரைக்காலில் சுவர் எழுதும் நிகழ்வில் பங்கேற்று பாஜகவின் சின்னத்தை வரைந்து வெளிப்புறவு ஏற்படுத்தினார். கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பூத் விஜய் அபியான் என்ற திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் உத்திகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தனது உரையில் ஊழலை ஒழித்து வளர்ச்சி அடைந்த புதுச்சேரியை உருவாக்குவதே தேசிய ஜனநாயக கூட்டணி நோக்கம் என்றும் அமீத்ஷா குறிப்பிட்டார்.

பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
 
Tags :

Share via

More stories