தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் மீண்டும் மழை?
தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று மற்றும் நாளை வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்பின் வரும் ஜனவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், உள்மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















