பள்ளி மாணவர்களுக்கு இன்று பள்ளிகளிலேயே ஆதார் பதிவு முகாம்.

by Editor / 23-02-2024 08:56:50am
பள்ளி மாணவர்களுக்கு இன்று பள்ளிகளிலேயே  ஆதார் பதிவு முகாம்.

இன்று பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு முகாம் நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்களின் ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்கும் பணிகளை முகாம்களில் மேற்கொள்ளலாம் என்றும். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முகாம்கள் நடத்தப்பட உள்ளது. ஒரு நாள் முகாமாக இல்லாமல் சில நாட்களுக்கு இந்த முகாம்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு சென்று இந்த ஆதார் பதிவை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Tags : பள்ளி மாணவர்களுக்கு இன்று பள்ளிகளிலேயே ஆதார் பதிவு முகாம்.

Share via

More stories