இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்10 நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு புறப்படுகிறார்.

by Editor / 27-01-2024 08:57:15am
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்10 நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு புறப்படுகிறார்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்றிரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டிற்கு புறப்படுகிறார். ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக மேலும் முதலீடுகளை ஈர்க்க இன்று வெளிநாடுகளுக்கு முதலமைச்சர் பயணம் மேற்கொள்கிறார். 10 நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள், அரசு பிரதிகளை சந்திக்கும் முதலமைச்சர், பிப்.7-ல் சென்னை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்10 நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு புறப்படுகிறார்.

Share via