தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு

by Staff / 29-09-2022 11:52:12am
தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு

காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியது. மேலும, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிக்கு அனுமதி தர இயலாது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாநகர ஆணையர்கள் அனுமதி மறுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் சமீபத்தில் நடந்து வரும் நிகழ்வுகள், சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும், முன்னெச்சரிக்கையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகளின் இல்லங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு உள்ளிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் சூழலில், ஆர்.எஸ்.எஸ். பேரணி பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுபடுகிறது.

உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தாலும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்போவதில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

Tags :

Share via