பாஜக மாநில புதிய தலைவராக நயினார் நாகேந்திரன்.

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை 2021ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். வரும் ஜூலையுடன் அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவு பெறும் நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் பாஜக தலைமை தீவிரம் காட்டியது. தொடக்கத்தில் இருந்தே நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரின் பெயர்கள் பேசப்பட்டன. இதனிடையே, பாஜக தேசியத் தலைமை நயினார் நாகேந்திரனை டெல்லிக்கு அழைத்து அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
நேற்று மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதுவரை யாரும் தாக்கல் செய்யாததால் நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவது உறுதியானது.
இதனிடையே ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவானது இன்று மாலை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார். இதற்கான சான்றிதழை நயினார் நாகேந்திரன் பெற்றுக் கொண்டார்.
Tags : பாஜக மாநில புதிய தலைவராக நயினார் நாகேந்திரன்