மனைவி தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவன்

மனைவியுடன் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் ஈரோட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த சென்னியப்பன் (வயது 35), கோகிலவாணி (வயது 26) தம்பதியினர்களுக்கு ஒன்றரை வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கோகிலவாணிக்கு மெக்கானிக் கனேஷன் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மனைவி தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கணவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் தனது குழந்தையுடன் ஈரோடு நகர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
Tags :