சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு 

by Editor / 21-09-2024 12:13:05am
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு 

உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த 9-ம் தேதி பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் மேற்கண்ட பரிந்துரையை ஏற்று ஐந்து கூடுதல் நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருக்கும் நீதிபதி விக்டோரியா கவுரி, நீதிபதி பி.பி.பாலாஜி, நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், நீதிபதி ஆர்.கலைமதி மற்றும் நீதிபதி கே.ஜி.திலகவதி ஆகியோர்களை அந்த உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷமீம் அகமது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. 

 

Tags : சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு 

Share via