தமிழக – கேரள எல்லைசோதனைசாவடிகளில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சோதனைகளைமேற்கொண்டுள்ளன மருத்துவக் குழுவினர் .

by Editor / 21-09-2024 12:20:27am
தமிழக – கேரள எல்லைசோதனைசாவடிகளில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சோதனைகளைமேற்கொண்டுள்ளன மருத்துவக் குழுவினர் .

கேரளாவில் 2018 இல் தொடங்கி கடந்த 2023ம் ஆண்டு வரையிலான இடைபட்ட காலங்களில் நிபா வைரஸ் வேகமாக பரவியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. சமீபத்தில் மலப்புரம் பகுதியில் 24 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொருவருக்கு தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் – கேரள எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டது. அந்த வகையில், கோவை – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வாளையார், வேலந்தாவளம், முள்ளி, மீனாட்சிபுரம், மேல்பாவி,  கோபாலபுரம், வீரப்ப கவுண்டனூர், நடுப்புனி, ஜமீன்காலியாபுரம், வடக்காடு, செம்மனாம்பதி-புளியரை,மேக்கரை உள்ளிட்ட சோதனை சாவடிகளில் மருத்துவ சுகாதார துறையினர் சிறப்பு தற்காலிக முகாம்களை அமைத்து 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சில சோதனைசாவடிகளில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சோதனைகளை மேற்கொண்டுவருகின்றனர்

 

Tags : தமிழக – கேரள எல்லையில் மருத்துவக் குழுவினர் தீவிர சோதனை

Share via