25வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதானி

இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி உலக கோடீஸ்வரர் பட்டியலில் 25வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஹிண்டர்பெர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு முதல் வாரத்திலேயே சுமார் ரூ.8 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை அதானி சந்தித்துள்ளார். கடந்த மாதம் ரூ.9,92,000 கோடியாக அவரது சொத்து மதிப்பு தற்போது ரூ.3,96,670 கோடியாக சரிந்துள்ளது. இன்று மட்டும் அவருக்கு ரூ.22,313 கோடி வீழ்ச்சி ஏற்பட்ட நிலையில், அவர் பணக்காரர்களின் பட்டியலில் 25வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
Tags :