குற்றாலம் அருவிப் பகுதிக்கு   புலி வந்ததா?: வனத்துறை ஆய்வு

by Editor / 18-05-2021 07:38:35pm
குற்றாலம் அருவிப் பகுதிக்கு   புலி வந்ததா?: வனத்துறை ஆய்வு

 

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி குற்றாலைம் அருவிகள் அமைந்துள்ளது. வனப்பகுதி என்பதால் சிறுத்தை , மான் , காட்டுப்பன்றிகள் , யானை உள்ளிட்ட விலங்குகள் அருவிப்பகுக்கு மேல் நடமாடுவது வழக்கம் . சில நேரங்களில் மான் உள்ளிட்ட விலங்குகள் இறைக்காகவும் , தண்ணீருக்காவும் , அருவிக்கு கீழ் வருவது உண்டு,
 இந்நிலையில் குற்றாலம் பிரதான அருவிக்கு மேல் உள்ள மலைப்பகுதியில் புலி ஒன்று நடமாடியதாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் செல்போனில் படம் எடுத்துள்ளனர் . தற்போது கொரோனா பரவல் காரணமாக அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அருவிப்பகுதி காணப்படுவதால் வனவிலங்குகள் சுதந்திரமாக அருவிப்பகுதியில் சுற்றித் திரிகிறது. இதனிடையே குற்றாலம் மலைப்பகுதியில் சுற்றித்திரிந்தது புலியா அல்லது சிறுத்தையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வீடியோ காட்சிகள் மற்றும் நடமாடிய பகுதியில் கிடைத்த கால்தடங்கள் ஆகியவற்றை வைத்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் .

 

Tags :

Share via