ஜெர்மனி-இந்தியா இடையேயான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஜெர்மனியின் தைசென்க்ரூப் மரைன் சிஸ்டம்ஸ் மற்றும் இந்தியாவின் மசாகன் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட் இடையேயான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய கடற்படையின்75I திட்டத்தின் கீழ், ஆறு மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்நாட்டிலேயே கட்டப்பட உள்ளன.இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 8 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் (சுமார் ₹72,000 - ₹84,000 கோடி) வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் காற்று சார்பற்ற உந்துவிசை தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும். இது கப்பல்கள் நீண்ட நேரம் நீருக்கு அடியில் தங்கியிருக்க உதவும். மார்ச் 2026-க்குள் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 பிப்ரவரி இறுதியில் விலை குறித்த பேச்சு வார்த்தைகள் முடிவடைந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஜனவரி 2026-ல் இந்தியா வந்திருந்தபோது இந்தப் பேச்சுவார்த்தைகள் வேகம் பெற்றன. இது இந்தியாவின் 'மேக் இன் இந்தியா திட்டத்திற்குப் பெரும் பலம் சேர்க்கும்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் முதல் நீர்மூழ்கிக் கப்பல் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
Tags :


















