விருதுநகர் சொக்கநாதர் சாமி கோவிலில் ரூ.90 லட்சத்தில் மயில் வாகனம், பிரதோஷ நந்தி

விருதுநகர் சொக்கநாதர் சாமி கோவிலில் சுவாமி திருவீதி உலாவிற்கு வெள்ளி மயில் வாகனம் மற்றும் பிரதோஷ நந்தி செய்வதற்கான பணி நேற்று தொடங்கியது.
விருதுநகரில் பழமை வாய்ந்த சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் இருந்து வருகிறது. கோவிலில் சுவாமி திருவீதி உலாவிற்கு வெள்ளி மயில் வாகனம் மற்றும் பிரதோஷ நந்தி செய்வதற்கான பணி நேற்று தொடங்கியது. 70 கிலோ வெள்ளியால் ரூ.90 லட்சம் மதிப்பில் வெள்ளிமயில் வாகனம் மற்றும் பிரதோஷ நந்தி செய்யப்படுகிறது.
இதற்கான மரத்திலான செய்த வடிவமைப்பில் நேற்று வெள்ளித்தகடு பொருத்தும் பணி தொடங்கப்பட்டது. கும்பகோணம் அருகே உள்ள செம்பனார்கோவிலை சேர்ந்த முருக ஸ்தபதி இந்த வாகனங்கள் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளார்.
இந்த வெள்ளி வாகனங்கள் செய்வதற்கான ஏற்பாடுகளை இந்நகர் பஞ்சுப்பேட்டை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர். தொடக்க விழாவில் பஞ்சுப்பேட்டை வியாபாரிகள் சங்க நிர்வாகி ராமதாஸ் மற்றும் என்ஜினீயர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags :