மாலத்தீவு அதிபரால் பறிபோன சிறுவனின் உயிர்

by Staff / 21-01-2024 04:57:26pm
மாலத்தீவு அதிபரால் பறிபோன சிறுவனின் உயிர்

இந்தியா மாலத்தீவுக்கிடையே ஏற்பட்டிருக்கும் அரசியல் மோதலால் அப்பாவி மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். மாலத்தீவை சேர்ந்த 14 வயது சிறுவன் மூளை கட்டியினால் பாதிக்கப்பட்டிருந்தநிலையில் பக்கவாதமும் வந்ததால் குடும்பத்தினா்  உயர் சிகிச்சைக்கு தலைநகர் மாளேவிற்கு எடுத்துச் செல்ல 'டோர்னியர்' வகை விமானத்தை கோரி இருந்தனர். அந்த வகை விமானங்கள் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் குழுமத்தால் தயாரிக்கப்பட்டது என்பதனால் மாலத்தீவு அதிபர் முகமது முயிசுஅனுமதி மறுக்கவே ., இதனால் 16 மணிநேரம் தாமதமானதால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அதிபரின் இச்செயல் பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories