என் சுறுசுறுப்புக்குக் காரணம் இளைஞரணி தான்-முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்.

சேலத்தில் தி.மு.க 2-வது மாநில இளைஞரணி மாநாடு நடந்துகொண்டிருக்கிறது. இது குறித்து வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்,
என்னை உருவாக்கிய பாசறை தான் இளைஞர் அணி. ஓய்வின்றி உழைக்கிறேன் என்று என்னை பாராட்டுகிறீர்கள் என்றால், அதற்குரிய தளத்தை அமைத்துக் கொடுத்தது, இளைஞர் அணி தான். தமிழகத்தில் என் கால் படாத இடங்கள் இல்லை என்னும் அளவிற்கு பயணம் செய்துள்ளேன் . நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காரணம் இளைஞரணி தான் . . மேலும் என்னை சுற்றி எப்போதும் ஆற்றல் மிக்க இளைஞர்கள் இருப்பதால்தான் சுறுசுறுப்பாக இருக்கிறேன் என்று கூறிள்ளார்
Tags :