வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்ட் டெம்போவில் கடத்தல் 3 பேர் கைது

by Editor / 20-08-2022 04:27:15pm
வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்ட் டெம்போவில் கடத்தல் 3 பேர் கைது


திட்டக்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பட்டப்பகலில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்ட் டெம்போவில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக இருந்து வரும் கிருஷ்ணன் என்பவருக்கும் குமார் என்பவர் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகுமாருக்கு கொடுக்க வேண்டிய பல லட்ச ரூபாயை தராமல் அழைத்து வந்ததாகவும் பலமுறை கேட்டும் பணத்தை தரவில்லை என்றும் கூறப்படுகிறது .இதனால் ஆத்திரம் அடைந்த குமார் தனது நண்பருடன் சேர்ந்து திட்டக்குடியில் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்த கிருஷ்ணனை டெம்போவில் கடத்திச் சென்றுள்ளார். கிருஷ்ணனின் மகன் கொடுத்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சி உதவியுடன் குமாரின் சம்மந்தி செல்வராஜ் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணனை மீட்டு போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories