நெல்லையில் வழிதவறி சென்ற 2 சிறுமிகளை மீட்ட போலீசார்

by Editor / 16-08-2021 09:25:07am
நெல்லையில் வழிதவறி சென்ற 2 சிறுமிகளை  மீட்ட போலீசார்

 பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமாதானபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. இவருக்கு 7 மற்றும் 3 வயது மதிக்கத்தக்க 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 5 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இருவரும் திடீரென மாயமாகினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து தொலைபேசி மூலம் பாளையங்கோட்டை போலீசாருக்கு புகார் அளித்தனர்.

அதன் பேரில், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் சிவகுமார், தலைமைக் காவலர்கள் நவராஜ், முத்துக்குமார் ஆகியோர் பல்வேறு இடங்களில் சிறுமியை தீவிரமாக தேடினர். அப்போது, பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலை பகுதியில் வழி தெரியாமல் 2 சிறுமிகளும் நிற்பதை அறிந்த போலீசார் அவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

புகார் கொடுத்த 30 நிமிடத்தில் சிறுமிகளை கண்டுபிடித்த கொடுத்த பாளையங்கோட்டை போலீசாருக்கு பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

 

Tags :

Share via