கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற வாலிபர் கைது

by Editor / 16-08-2021 09:22:24am
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற வாலிபர் கைது

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆவடி கள்ளுக்கடை தெருவில் பாக்கியராஜ் என்ற பழக்கடை வியாபாரி வசித்து வருகின்றார். இந்நிலையில் இரவு நேரத்தில் வாலிபர் ஒருவர் இவரிடம் பழம் வாங்கி விட்டு அதற்கான பணம் 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அது கள்ள நோட்டு என்று அறிந்த பழக்கடை வியாபாரி அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அதில் அவர் சென்னை பெரம்பூர் கே.சி கார்டன் பகுதியில் வசித்து வரும் சிவா என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்ததில் அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 7, 500 ரூபாய் நோட்டுக்கள் 20 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் 6 இருப்பதை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றததும் விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கள்ள நோட்டுகளை யாரிடமிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo