பிரதமரை வரவேற்க கட்சி நிர்வாகிகள் வர வேண்டாம்

by Staff / 30-05-2024 12:49:14pm
பிரதமரை வரவேற்க கட்சி நிர்வாகிகள் வர வேண்டாம்

கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என தமிழக பாஜகவினருக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும், பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை அரசியல் கட்சி நிகழ்வாக மாற்றக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்காக, விடுதியில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via