தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சார்பில்- பெண்கள் கபடி போட்டி
கோவில்பட்டியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செவன்ஸ் டே மெட்ரிக் பள்ளியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
கபடி போட்டியில் 27 அணிகள் கலந்து கலந்து கொண்டனர். பெண்கள் கபடி போட்டியை திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து.வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்,இதில் 14 வயதிற்கு உட்பட்ட போட்டியில்முதல் இடம் தூத்துக்குடி தஸ்நேவிஸ் பள்ளி, 2ம் இடம் நாலூமாவடி காமராஜ் பள்ளி,3ம் இடம் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி.17 வயதிற்குட்பட்ட போட்டியில் முதல் இடம் தூத்துக்குடி தஸ்நேவிஸ் பள்ளி 2ம் இடம் நாலூமாவடி காமராஜ் பள்ளி,3ம் இடம் கோவில்பட்டி நகராட்சி பள்ளி 19 வயதிற்குட்பட்ட போட்டியில் முதல் இடம் கோவில்பட்டி LSV மெட்ரிக் பள்ளி 2ம் இடம்தூத்துக்குடி தஸ்நேவிஸ் பள்ளி,3ம் இடம் தூத்துக்குடி VVD பள்ளி இடம் பிடித்தனர்.இந்நிகழ்வில் கோவில்பட்டி திமுக மத்திய ஒன்றிய கழக செயலாளர் பீக்கிளிபட்டி முருகேசன்,திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாத்தையா,செவன்ஸ் டே மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜார்ஜ் பால்ராஜ்,பொருளாளர் மெர்வின் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ் கண்ணன்,முனைவர் கரிகாலன்,காளிராஜ், சுடலை,முனைவர் லட்சுமணப்பெருமாள், உள்ளிட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Tags :



















