பட்டாசு ஆலை விபத்து.. அமைச்சர் தங்கம் தென்னரசு,நேரில் சென்று ஆறுதல்

by Editor / 11-06-2025 04:10:26pm
பட்டாசு ஆலை விபத்து.. அமைச்சர் தங்கம் தென்னரசு,நேரில் சென்று ஆறுதல்

விருதுநகர் மாவட்டம் வடகரையில் இன்று பட்டாசு ஆலை வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், அரசு உறுதுணையாக இருப்பதாகவும், எதிர்காலங்களில் விபத்துக்களைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

 

Tags :

Share via