இரவு நேரத்தில் பெண் வீட்டுக்குள் புகுந்த காவலர் அப்பகுதி பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைப்பு...

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் மணிராஜ் என்பவர் திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உமையதலைவன்பட்டி என்னும் கிராமத்திற்கு காரில் சென்று பெண் ஒருவர் வீட்டு முன்பு காரை நிறுத்தி அந்த பெண் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் நிலையில் அப்பகுதி மக்கள் கையும் களவுமாக பிடித்து திருவேங்கடம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை எடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
மேலும் இரவு நேரத்தில் பெண் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை குறித்தான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது..
Tags : இரவு நேரத்தில் பெண் வீட்டுக்குள் புகுந்த காவலர் அப்பகுதி பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைப்பு...