பாஜகவில் இருந்து விலகினார் நடிகை விஜயசாந்தி

பிரபல நடிகையும், முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை தெலங்கானா பாஜக தலைவர் கிஷன் ரெட்டிக்கு அவர் அனுப்பியுள்ளார். தொடர்ந்து, அவர் எந்தக் கட்சியில் இணைவார் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. எனினும், அவர் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், விஜயசாந்திக்கு பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்து கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
Tags :