காட்டுத்தீயால் 700 குடும்பங்கள் வெளியேற்றம்

by Editor / 12-06-2025 12:58:35pm
காட்டுத்தீயால் 700 குடும்பங்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் ஓரிகனின் கொலம்பிய ஆற்று கனவாய் பகுதியில் நேற்று (ஜூன் 11) முதல் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் அம்மாகாணத்தின் ஹூத் ஆற்றுக்கும், டல்லஸ் நகரத்துக்கும் இடையிலான 84-ம் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் வசித்த சுமார் 700 குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஹெலிகாப்டர்கள், விமானங்களின் மூலம் காட்டுத் தீயை அணைக்க அமெரிக்க தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via