பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் மே 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை

by Admin / 20-05-2023 12:37:23pm
 பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள்  மே 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை

 

 

 

கோவில்பட்டியில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டி - 4வது லீக் ஆட்டத்தில் சவுத் சென்ட்ரல் ரயில்வே செகந்திராபாத்  அணியும், கனரா பேங்க் பெங்களுரு அணியும், மோதின.

இதில் 3:2 என்ற கோல் கணக்கில் கனரா பேங்க் பெங்களுரு அணி வெற்றிப் பெற்றது. 

 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் மே 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் புல்வெளி ஹாக்கி மைதானத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியை காண முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஹாக்கி போட்டியை கண்டு மகிழ்ந்தார்.

11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.

இரண்டாம் நாளான 19.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் சவுத் சென்ட்ரல் ரயில்வே செகந்திராபாத்  அணியும்,  கனரா பேங்க் பெங்களுரு அணியும் மோதின.

இதில் 3:2 என்ற கோல் கணக்கில் கனரா பேங்க், பெங்களுரு அணி வெற்றிப் பெற்றது. 

20-வது நிமிடத்தில் கனரா பேங்க், பெங்களுரு அணி வீரர் பிருத்விராஜ் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.  

38-வது நிமிடத்தில் சவுத் சென்ட்ரல் ரயில்வே, செகந்திராபாத்  அணி வீரர் பிரதாப் லக்ரா பெனால்டி ஸ்ட்ரோக் முறையில் ஒரு கோல் போட்டார்.  

 48-வது நிமிடத்தில் கனரா பேங்க், பெங்களுரு அணி வீரர் சோமையா பெனால்டி கார்னர்  முறையில் ஒரு கோல் போட்டார்.   

49-வது நிமிடத்தில் கனரா பேங்க், பெங்களுரு அணி வீரர் யாதீஷ் குமார் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 

57-வது நிமிடத்தில் சவுத் சென்ட்ரல் ரயில்வே, செகந்திராபாத்  அணி வீரர் பிரதாப் லக்ரா பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.  

ஆல்பர்ட் ஜான் மற்றும் கோபிநாத் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

சிறந்த ஆட்டக்காரர் : யாதிஷ் குமார் கனரா பேங்க், பெங்களுரு

5வது லீக் ஆட்டத்தில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு  அணியும்,  தமிழ்நாடு  போலீஸ், சென்னை அணியும் மோதின.

இதில் 7:1 என்ற கோல் கணக்கில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு நியூ டெல்லி அணி வெற்றிப் பெற்றது. 

18-வது நிமிடத்தில் நியூ டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வீரர் ஆர்மான் குரேஷி பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.  

20-வது நிமிடத்தில் தமிழ்நாடு  போலீஸ், சென்னை அணி வீரர் மதன் பெனால்டி ஸ்ட்ரோக் முறையில் ஒரு கோல் போட்டார்.  

 24-வது நிமிடத்தில் நியூ டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வீரர் தல்விந்தர் சிங்  பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.   

27-வது நிமிடத்தில் நியூ டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வீரர் சுமீத் குமார்  பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 

29-வது நிமிடத்தில் நியூ டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு  அணி வீரர் ஆர்மான் குரேஷி பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.  

38-வது நிமிடத்தில் நியூ டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு  அணி வீரர் சுமீத் குமார்  பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 

44-வது நிமிடத்தில் நியூ டெல்லி,  பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு  அணி வீரர் மந்தீப் அன்டில் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 

58-வது நிமிடத்தில் நியூ டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வீரர் சுனில் யாதவ் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.  

ஹசன் அலி மற்றும் பிரைஜோ ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

சிறந்த ஆட்டக்காரர் :  ராஜுட் சிங்  நியூடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு,

6வது லீக் ஆட்டத்தில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியுடன் சவுத் வெஸ்டர்ன் ரயில்வே ஹுப்ளி அணி இரவு 8.15 மணியளவில் மோதின. 

இதில் 2:1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா வெற்றிப் பெற்றது. 

26-வது நிமிடத்தில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வீரர் பர்விந்தர் சிங் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.  

41-வது நிமிடத்தில் நியூ டெல்லி, காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வீரர் அபாரன் சுதேவ்  பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.

53-வது நிமிடத்தில் சவுத் வெஸ்டர்ன் ரயில்வே, ஹுப்ளி அணி வீரர் ராகுல் லோகாண்த்  பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.   

சுரேஷ் மற்றும் சுப்பையா தாஸ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

சிறந்த ஆட்டக்காரர் : பர்விந்தர் சிங் நியூ டெல்லி, காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா 

இன்று (20.05.2023) நடைபெறும் இப்போட்டிகளின் விவரம்:

கஸ்டம்ஸ், புனே மற்றும் இந்தியன் பேங்க், சென்னை (காலை 07.00)

 

யூனியன் பேங்க் மும்பை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்டிஏடி, கோவில்பட்டி (மாலை 5.15)

 

ரயில் வீல் பேக்டரி பெங்களுரு மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் சென்னை (இரவு 6.45)

பஞ்சாப் நேஷனல் பேங்க், நியூ டெல்லி மற்றும் நிஸ்வாஸ் ஹாக்கி டீம் பாம்போஸ் (இரவு 8.15

-)கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

 பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள்  மே 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை
 

Tags :

Share via